மதுரை மத்திய சிறையில் கண்காணிப்பாளராக இருந்த ஆனந்தன் கோவைக்கு திடீரென கடந்தவாரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மத்திய சிறையில் கடந்த ஆண்டு கண்காணிப்பாளராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார். அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையிலும், கைதிகளுக்கு வெளியிலிருந்து கஞ்சாப் பொட்டலம் தொடர்ந்து வீசப்பட்டது. மேலும், கைதிகளுக்கு செல்போன் பேசவும், தடைசெய்யப்பட்ட பொருள்கள் கிடைக்கவும் சிறை அலுவலர்கள் சிலரே உடைந்தையாக இருந்ததாக புகார்கள் எழுந்தன. அதன்படி சிலரை இடமாற்றிட கண்காணிப்பாளர் உயரதிகாரிகளுக்குப் பரிந்துரைத்தார்.
மதுரை மத்திய சிறையில் கடந்த சில வாரங்களா கைதிகளுக்கு இடையே கோஷ்டி மோதலும் ஏற்பட்டது. இதில் காயமைடந்து சிகிச்சைக்கும் அவ்வப்போது கைதிகள் அனுமதிக்கப்பட்டுவந்தனர். கைதிகளுக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சைகள் சரியான முறையில் கிடைப்பதில்லை என்றும் புகார் எழுந்தது.
இத்தகைய சூழலில் கடந்த வாரம் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆனந்தன் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் வேலூர் மத்திய சிறையில் கண்காணிப்பாளராக இருந்த ரா.அறிவுடைநம்பி மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாக!

லண்டனில் கத்திக் குத்து தாக்குதலில் இந்திய வம்சாவளி இளைஞர் படுகொலை

விஜய் ஆண்டனி - மந்திர மூர்த்தி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

கதை, திரைக்கதை - திமுக IT WING! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


