5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா!

பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.

News image

ஜி.கே. வாசன்.

Updated On :14 ஜூன் 2026, 3:40 pm IST

பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன், மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, மாநிலத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விலகுகிறது.

கூட்டணி அரசியலில் இயக்கத்தின் வளர்ச்சி குறைவதாக நிர்வாகிகள் கருதுகிறார்கள். தனித்தன்மையோடு கட்சி செயல்பட வேண்டும் என விரும்புகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் வரும் வரை எங்கள் கட்சி தனித்தன்மையோடு செயல்பட்டு மீண்டும் அடித்தளத்தை பலப்படுத்த வேண்டும்.

இனி தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி. கூட்டணிக் கட்சிகளுடன் எந்த மனக்குமுறலும் இல்லை, கூட்டணியில் இருந்து நட்பு சக்தியாகவே விலகுகிறோம் என்று தெரிவித்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 5 தொகுதிகளில் பாஜக சின்னத்தில் போட்டியிட்டு தமாகா தோல்லியடைந்தது.

Summary

Tamil Maanila Congress leader G.K. Vasan has announced that the party is withdrawing from the BJP alliance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.