சர்வதேச பொருளாதார நிலையே, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்குக் காரணம் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை அடைந்து வரும் நிலையில், இது குறித்து இன்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் விளக்கம் அளித்தார்.
அப்போது, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதைத் தடுக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சந்தையில் பண மதிப்பு என்பது நிலையற்றதாகவே இருக்கும். ஆனால், அதற்காக மத்திய அரசு முதலீட்டு திட்டங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது.
இந்தியாவில் தற்போது நிலக்கரி சுரங்கங்கள் பலவும் பணிகளைத் துவக்காமல் உள்ளன. மேலும், இரும்பு தாது சுரங்கங்களும் பணிகளை முழு வீச்சில் நடத்தினால், நிச்சயம் பொருளாதாரம் வளர்ச்சி நிலையை அடையும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாக!

லண்டனில் கத்திக் குத்து தாக்குதலில் இந்திய வம்சாவளி இளைஞர் படுகொலை

விஜய் ஆண்டனி - மந்திர மூர்த்தி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

கதை, திரைக்கதை - திமுக IT WING! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



