பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

ரெளடி குண்டர் சட்டத்தில் கைது

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ரெளடி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:16 pm IST

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ரெளடி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள மங்களபுரம் குள்ளன் தெருவில் வசிப்பவர் மு. மகன் சதீஷ் (22). இவர் மீது அம்பத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையங்களில் அடிதடி, தங்கச் சங்கிலி பறிப்பு, கொலை மிரட்டல், கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கைது செய்ய அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற சென்னை பெருநகரக் காவல் துறை ஆணையர் ஜார்ஜ், அச் சட்டத்தின் கீழ் சதீஷை கைது செய்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து சதீஷை போலீஸார் கைது செய்து, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.