கன்னியாக்குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து செப்டம்பர் 3ம் தேதி முதல் தண்ணர் திறந்து விட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்காக 3.9.2013 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.
இதனால், திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திலுள்ள பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுவதோடு, 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முன்னோடித் திட்டங்களில் திமுகதான் ‘ஓஜி!' - முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்

ஹிமாசலில் சந்தேகத்திற்குரிய 'பாகிஸ்தான் பலூன்' கண்டெடுப்பு!

யூத் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சினிமாவைக் காப்பாற்ற ஒரே வழி... ரசிகர்களுக்கு மமிதா பைஜு வேண்டுகோள்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


