சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

மத்திய அரசின் ஆட்சி மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும்: கருணாநிதி

இந்தியாவின் இரண்டாம் ஆட்சி மொழியாகத் தமிழை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் கூறியுள்ளார்.இது மகிழ்ச்சியை அளிக்கும் செய்தியாகும்.தருண்

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 9:01 pm IST

மத்திய அரசின் ஆட்சி மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் இரண்டாம் ஆட்சி மொழியாகத் தமிழை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் கூறியுள்ளார்.இது மகிழ்ச்சியை அளிக்கும் செய்தியாகும்.தருண் விஜய் பேசியதைத் தொலைக்காட்சியில் பார்த்தவுடன், அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்குமாறு திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கத்திடம் கூறினேன்.

இந்த வேளையில், மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழை ஏற்க வேண்டும் என்று திமுக நீண்ட ஆண்டுகளாக வலியுறுத்தி வருவதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.2011-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும் இதனை வலியுறுத்தியிருந்தோம்.கச்சத்தீவு பிரச்னையில் தமிழக அரசு சுணக்கம் காட்டாமல் ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தினர் கூறியுள்ள ஆதாரங்களையும், தமிழக அரசிடம் உள்ள ஆதாரங்களையும் திரட்டி உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான மண்டபங்களில் நாத்திகர்கள் நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்கு தரக்கூடாது என்று அரசு சார்பில் சுற்றிக்கை விடப்பட்டுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி உண்மையானால் கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.