குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்
/

கன மழை: சென்னையில் போக்குவரத்து நெரிசல்

நேற்று இரவு விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. மழை நீர் வடியாததால் சாலையில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு

Updated On :11 செப்டம்பர் 2013, 9:38 am IST

நேற்று இரவு விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. மழை நீர் வடியாததால் சாலையில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினர். சில இடங்களில் வாகனங்கள் பழுதாகி நின்றன. இரு சக்கர வாகன ஓட்டிகள் இதனால் பெரிதும் சிரமப் பட்டனர். மழை நீர் தாழ்வான பகுதிகளில் புகுந்துள்ளதால், மின் விநியோகம் சில இடங்களில் துண்டிக்கப்பட்டது.

சென்னையில் நுங்கம்பாக்கம், விமான நிலையம் ஆகிய பகுதிகளில் 7 செ.மீ. மழை அளவு பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இன்றும் நாளையும் கன மழை பெய்யக் கூடும் என்று அது தெரிவித்தது.

லண்டனில் இருந்து சென்னைக்கு இன்று காலை வந்த லுப்தான்ஸா விமானம், பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.