வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதலே பரவலாக மழை பெய்தது. சென்னை உட்பட பல இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் கன மழை பெய்ததால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
இந்த நிலையில், தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 24 மணி நேரத்துக்கு கன மழை நீடிக்கும் என்றும், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”விஜய்க்கு இரட்டை இலைச் சின்னத்தில்...!” பிரசாரத்தில் குழம்பிய செங்கோட்டையன்!

ஜன நாயகன் விவகாரம்: அரசுக்கு மாரி செல்வராஜ் கோரிக்கை!

இலவச ரேபிஸ் தடுப்பூசி: இந்திய மருத்துவத் துறையைப் பாராட்டிய ஜெர்மன் பயணி!

அபிஷேக் சர்மா அதிரடி: பஞ்சாப் கிங்ஸுக்கு 220 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


