தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

வேடசந்தூர் : குடகனாறு அணையில் எலும்புக் கூடு கண்டெடுப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் குடகனாறு அணையின் உட்பகுதியில் எலும்புக் கூடு ஒன்றை பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

Updated On :11 செப்டம்பர் 2013, 4:47 am

திண்டுக்கல் மாவட்டத்தில் குடகனாறு அணையின் உட்பகுதியில் எலும்புக் கூடு ஒன்றை பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

குடகனாறு அணையில் தண்ணீர் இல்லாமல் இருந்த  உட்பகுதியில் எலும்புக் கூடு ஒன்று இருப்பதை அப்பகுதியில் மாடு மேய்க்க வந்தவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், எலும்புக் கூடு மீதிருந்த ஆடையை அடையாளமாக வைத்து, இதுவரை காணாமல் போனவர்களின் பட்டியலை சேகரித்து விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த 2011ஆம் ஆண்டு காணாமல் போன பாலப்பட்டி கிராமம் நாச்சிமுத்துவின் மகள் நித்யா (16) என்பது தெரிய வந்துள்ளது. எலும்புக் கூடு மீதிருந்த ஆடையை அடையாளமாக வைத்து, அவரது பெற்றோர், அது தனது மகள் நித்யா, காணாமல் போன அன்று அணிந்திருந்த ஆடை என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து, எலும்புக் கூடை தடயவியல் நிபுணர்கள் சேகரித்து சென்னை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.