மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சென்னை கோளரங்கத்தை டிஜிட்டல் மயமாக்க ரூ. 10 கோடி : பி. பழனியப்பன்

சென்னையில் உள்ள கோளரங்கம் ரூ. 10 கோடியில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தெரிவித்தார்.

Updated On :4 ஏப்ரல் 2013, 11:08 am

சென்னையில் உள்ள கோளரங்கம் ரூ. 10 கோடியில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை அவர் தாக்கல் செய்த உயர் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது: சென்னையில் உள்ள கோளரங்கம் ரூ. 10 கோடியில் டிஜிட்டல் கோளரங்கமாக மேம்படுத்தப்படும். சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் உள்ள முப்பரிமான அரங்கு நவீனப்படுத்தப்படும்.

வேலூரில் முப்பரிமான அரங்கு: அறிவியல் தொழில் நுட்ப கோட்பாடுகளை பரப்பும் வகையில் வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் முப்பரிமான அரங்கு அமைக்கப்படும்.

கணித பஸ்: கிராமப்புற மாணவர்களுக்கு கணிதத்தின் மீது ஆர்வத்தினை அதிகரிக்கும் வகையில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான நடமாடும் பஸ் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.