திண்டிவனம் அருகே எண்டியூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக செவ்வாய்க்கிழமை பாமகவினர் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
திண்டிவனம் அருகே உள்ள எண்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிவரை பெற வேண்டும். இதனைத் தொடர்ந்து 5 மணிக்கு போட்டிக்கு தகுதியுள்ளவர்கள் பெயரை அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். ஆனால் பகல் ஒரு மணிக்கு வேட்பு மனுவை பெறுபவர்கள் அலுவலகத்தை பூட்டிக் கொண்டு சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து ஆத்திரம் அடைந்த பாமகவினர் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் பகல் 1.30 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து திண்டிவனம் டிஎஸ்பி குப்புசாமி அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். வேட்பு மனு பெறும் அதிகாரிகளை வரவழைப்பதாக அவர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை 2 மணி அளவில் கைவிட்டனர்.
ஆனால் 3 மணிவரை யாரும் வரவில்லை. இதனால் அவர்கள் மீண்டும் 3.15 மணிக்கு சாலை மறியலைத் தொடர்ந்தனர். கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிடவும் ஊர்வலமாக வந்தனர். பின்னர் போலீஸôர் இவர்களை தடுத்து நிறுத்தினர். இரவு 7.15 மணிவரை இச் சாலை மறியல் நீடித்தது. பாமகவினருக்கு ஆதரவாக முன்னாள் எம்எல்ஏ செந்தமிழ்ச்செல்வன், முன்னாள் மாவட்டத் தலைவர் எஸ்.இ.ஏழுமலை ஆகியோரும் பங்கேற்றனர். இச் சாலை மறியல் காரணமாக போலீஸôர் போக்குவரத்தை வேறு பகுதி வழியாக திருப்பி விட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கூட்டுறவு துணைப் பதிவாளர் விஜயசக்தி இவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும், பட்டியல் அலுவலகத்தில் ஒட்டப்படாததாலும் தேர்தலை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பதென்று உத்தவிட்டார். இதனைத் தொடர்ந்து பாமகவினர் சாலை மறியலை கைவிட்டனர். இப் போராட்டம் காரணமாக எண்டியூர் பகுதியில் போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

