மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

3 தமிழர்களை ஜெயலலிதா காப்பாற்றுவார்: நெடுமாறன் நம்பிக்கை

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார்

Updated On :12 ஏப்ரல் 2013, 2:52 pm

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறியதாவது:-

பஞ்சாபைச் சேர்ந்த தேவேந்தர்பால் சிங் புல்லருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 19 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உலகெங்கும் பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு வரும் வேளையில் இந்தத் தீர்ப்பு மனித உரிமை ஆர்வலர்களை வருத்தமடையைச் செய்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் வழக்கை இந்தத் தீர்ப்பு பாதிக்கக்கூடும். ஆனால், தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 3 தமிழர்களைக் காப்பாற்ற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.