பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடையநல்லூர் அருகே மர்ம கும்பலால் இருவர் படுகொலை

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே மர்ம கும்பலால் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

News image
Updated On :12 ஏப்ரல் 2013, 5:57 am

குமார முருகன்

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே மர்ம கும்பலால் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் இன்று காலை முன் விரோதம் காரணமாக கனி (30), குமார் (32) இருவரும் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இன்னொரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இருவரும் பத்து தினங்களுக்கு முன்னர் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியில் உள்ளனர். இருவரும் இன்று காலை வழக்கம்போல், சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு ஊருக்குத் திரும்பி வந்தனர். வரும் வழியில் மர்ம கும்பல் அரிவாளால் இவர்கள் இருவரையும் வெட்டிக் கொலை செய்து தப்பித்துள்ளது.  இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.