வி.கே. புரத்தில் மின்சாரம் தாக்கி வடமாநில இளைஞர் சாவு
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் திங்கள்கிழமை இரவு வடமாநிலத்தை சேர்ந்த ராட்டின ஆபரேட்டர் இறந்தார்.


திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் திங்கள்கிழமை இரவு வடமாநிலத்தை சேர்ந்த ராட்டின ஆபரேட்டர் இறந்தார்.
சித்திரை விசுத் திருவிழாவையொட்டி பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மின்சார ராட்டினம் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் பிரதான சாலையில் வயல் வெளியில் மின்சாரம் ராட்டினம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த ராட்டினத்தில் உத்தரபிரதேசம் மாநிலம் இன்னிங் சவுரா பைசா பாத் ரோடு பகுதியை சேர்ந்த மன்சூர்ரகுமான் மகன் குஷோஅகமது (30) என்பவர் ஆபரேட்டராக பணி செய்து வந்தார். திங்கள்கிழமை இரவில் ராட்டினம் இயங்கி கொண்டிருந்தது. அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் ராட்டினத்தை
இயக்கி கொண்டிருந்த குஷோஅகமது உடல் கருகி சம்பவ இடத்திலே இறந்தார்.
தகவலறிந்த விக்கிரமசி்ங்கபுரம் போலீஸார் குஷோஅகமது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...