கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை கேரளத்தில் தவறவிட்ட பெற்றோரைத் தேடி 8 வயது சிறுவன் சேலம் வந்துள்ளார்.
சேலம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தின் தலைவராக இருப்பவர் ஏ.சேவியர். இவரை ஞாயிற்றுக்கிழமை அணுகிய கேரள மாநிலம் கோழிக்கோடு குழந்தைகள் நலக் குழும ஊழியர்கள், தங்களது பராமரிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வந்த சேலத்தைச் சேர்ந்த செந்தில் (8) என்ற சிறுவனை ஒப்படைத்துச் சென்றனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்கோடு பகுதிக்கு வேலைக்குச் சென்ற செந்திலின் தந்தை முருகேசன் என்பவர், தாங்கள் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பிழைப்பு தேடி வந்த இடத்தில் ஏழ்மையில் வாடுவதால் சிறுவனை அரசு பராமரிப்பில் விட்டுச் செல்வதாகவும் அடிக்கடி வந்து பார்த்துச் செல்வதாகவும் கூறிச் சென்றுள்ளார்.இருப்பினும் 3 ஆண்டுகள் ஆன நிலையிலும் செந்திலைத் தேடி யாரும் கோழிக்கோடு குழந்தைகள் நலக் குழுமத்தை அணுகவில்லை என்று கூறப்படுகிறது. காணாமல் போன, ஆதரவற்ற குழந்தைகளை அவர்களது சொந்த மாநிலத்துக்கே கொண்டுச் செல்ல வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் கூறுகிறது.
இதையடுத்து சிறுவன் செந்தில் சேலம் குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இப்போது அவர் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள தொன்போஸ்கோ அன்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தனது சொந்த ஊர் சேலம் என்று கூறும் சிறுவனுக்கு மேற்கொண்டு முகவரி தெரியவில்லை. தனது தந்தை பெயர் முருகேசன் என்று கூறும் அவர், தாயார் அன்னக்கொடி இறந்துவிட்டார் என்றும் தெரிவிக்கிறார்.தனது சகோதரிகள் உமா, பானுமதி, மகேஸ்வரி, ராஜேஸ்வரி என்றும் சகோதரர்கள் சீனு, குமார், இளையராஜா என்றும் அவர் கூறுகிறார். இதையடுத்து செந்திலின் குடும்பத்தைத் தேடும் பணியில் குழந்தைகள் நலக் குழுமம் ஈடுபட்டுள்ளது.
இதேபோல் கடந்த சில நாள்களுக்கு முன்பு சேலம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள 12 வயது சிறுவன் ஆனந்த், தெலுங்கு மட்டுமே பேசி வருகிறார். எனவே அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் அவரை அவரது சொந்த மாநிலத்துக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் சேவியர் தெரிவித்துள்ளார்.இந்த சிறுவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0427 - 2416631 என்ற தொலைப்பேசி எண்ணுக்கோ அல்லது 1098 என்ற இலவச தொலைப்பேசி எண்ணுக்கோ தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

