சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளால் சுகாதாரக் கேடு: புகை மூட்டத்தால் சிரமப்படும் பொதுமக்கள்

விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சிவஞானபுரம் ஊராட்சியைச் சேர்ந்த என்.ஜி.ஓ காலனி, முல்லை நகர், லட்சுமி காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் குடியிருப்பவர்கள் குப்பைகளை கொட்டுவதற்காக
Updated on
1 min read

விருதுநகரில் சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளால் சுற்றுப்புற சுகாதாரக் கேடுகளை விளைவித்து வருகிறது. அதோடு, பிளாஸ்டிக் குப்பைக்கு தீவைப்பதால் எழும் புகை மூட்டம் காரணமாக வாகனங்களில் செல்ல முடியாமலும், துர்நாற்றத்தால் குடியிருப்புகளில் இருக்க முடியாமலும் சிரமப்பட வேண்டியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சிவஞானபுரம் ஊராட்சியைச் சேர்ந்த என்.ஜி.ஓ காலனி, முல்லை நகர், லட்சுமி காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் குடியிருப்பவர்கள் குப்பைகளை கொட்டுவதற்காக நான்கு வழி் சர்வீஸ் சாலையோரத்தில் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இத்தொட்டிகளில் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட மக்காத குப்பைகளாகவே வந்து கொட்டுகின்றனர்.அதோடு, தொட்டிகள் நிறைந்தாலும் உடனே துப்புரவு பணி மேற்கொள்ளாத நிலையே இருக்கிறது. அதனால், தொட்டிக்கு அருகிலேயே மறுபடியும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதை, உடனுக்கு உடன் அகற்றப்படாமலும், தரம் பிரிக்கப்படாமலும் இருப்பதாலும் துர்நாற்றம் ஏற்படுகிறது. அந்த வழியாக செல்லும் பாதாசாரிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளது.

இதில், அவ்வப்போது தீவைப்பதால் பிளாஸ்டிக் பொருள்களாகவே இருப்பதால்  துர்நாற்றத்துடன் புகை மண்டலமாக மாறி விடுகிறது. இதுபோன்ற காரணங்களால் 4 வழிச்சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் எதிர் பக்கம் வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்தில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இது குறித்து என்.ஜி.ஓ காலனிப்பகுதியைச் சேர்ந்த ரோசம்மாள் கூறுகையில், பெரிய அளவிலான ஊராட்சியாக இருக்கிறது. அதனால், குப்பை தொட்டிகளை 4 வழி சர்வீஸ் சாலை ஓரங்களிலும், தெரு முகப்புகளிலும் வைத்து விடுகின்றனர். இந்த தொட்டிகளில் சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிப்பதற்கு ஊராட்சி நி்ர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்தக் பிளாஸ்டிக் குப்பைகளால் அதிகம் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இரவு நேரங்களில் வீடுகளில் தூங்க முடியாத நிலையிருக்கிறது. இந்தக் குப்பைகளை அப்படியே போட்டு திறந்த வெளியில் தீ வைத்து விடுகின்றனர். இதிலிருந்து வெளியேறும் கரும்புகை துர்நாற்றத்துடன் இருப்பதால் குடியிருப்புகளில் உள்ளோர் பெரும் அவதிக்கு உள்ளாகிற நிலையிருப்பதாக ரோசம்மாள் தெரிவி்த்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com