இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வி.கே. புரம் மதுரா கோட்ஸ் ஆலையில் மின்மாற்றி வெடித்து பொறியாளர் சாவு

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ் ஆலையில் மின்மாற்றி வெடித்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிர்வாகபொறியாளர் அ. தீனதயாளன் (40)

News image
Updated On :23 ஏப்ரல் 2013, 5:07 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ் ஆலையில் மின்மாற்றி வெடித்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிர்வாகபொறியாளர் அ. தீனதயாளன் (40) இறந்தார்.

மதுரா பழங்காநத்தம் பசும்பொன்நகர் நீலகண்டபெருமாள் தெருவை சேர்ந்த அழகர்சாமி மகன் தீனதயாளன். இவர் விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ் ஆலையில் நிர்வாக பொறியாளராக பணி செய்து வந்தார். மதுரை பாண்டியநாயக்கர் கோவில் தெற்குத் தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் அன்னபிரகாசம் (30). இவர் மதுரா கோட்ஸ் ஆலையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.

இம்மாதம் 5 ம் தேதி ஆலையில் உள்ள மின்மாற்றியில் திடீரென பழுது ஏற்பட்டு புகை வந்தது. தீனதயாளன், அன்னபிரகாசம் ஆகியோர் மின்மாற்றியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்மாற்றி வெடித்ததில் தீனதயாளனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீனதயாளன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கு இறந்தார். லேசான காயம் ஏற்பட்ட அன்னபிரகாசம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தீனதயாளன் மனைவி தனலட்சுமி புகாரின்பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.