செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

திருச்சியை அடுத்த திருமயத்தில் பிஎச்இஎல் நிறுவனத்தின் ஒரு ஆலையைத் துவக்கி வைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை திருச்சி வருகிறார்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2013, 5:04 am

திருச்சியை அடுத்த திருமயத்தில் பிஎச்இஎல் நிறுவனத்தின் ஒரு ஆலையைத் துவக்கி வைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை திருச்சி வருகிறார்.

புது தில்லியில் இருந்து இன்று காலை 8 மணிக்கு கிளம்பிய மன்மோகன் சிங் சற்று நேரத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு வருகை தர உள்ளார்.

இதையடுத்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்  தேச பொதுவுடையை கேட்சித் தலைவர் மணியரசன் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் உட்பட நூற்றுக்கணக்கோனார் திருச்சி விமான நிலையத்தில் கூடியுள்ளனர்.

தமிழகத்தில் எத்தனையோ பிரச்னைகள் இருக்க, அதற்கெல்லாம் செவி கொடுக்காத பிரதமர், ஒரு ஆலையைத் துவக்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக தமிழகம் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இவர்கள் கருப்புக் கொடியோடு கூடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.