திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜுலை மாத வருமானம் ரூ. 1.75 கோடியைத் தாண்டியது
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானது மாதந்தோறும் எண்ணப்படுகிறது. திருக்கோயில் தக்கார் ப.தா.கோட்டை


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜுலை மாத மொத்த வருமானம் ரூபாய் 1.75 கோடியைத்தாண்டியது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானது மாதந்தோறும் எண்ணப்படுகிறது. திருக்கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) ம.அன்புமணி, சங்கரன்கோவில் துணை ஆணையர் இரா.பொன்சுவாமிநாதன், அலுவலக கண்காணிப்பாளர் இரா.சாத்தையா, ஆய்வர்கள் சி.முருகானந்தம், வெ.மாரியப்பன், தலைமை கணக்கர் பா.பட்டுராஜா உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் மு.அகிலன், சு.வேலாண்டி, இரா.மோகன் ஆகியோரது முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட்டது.
இதன்படி ஜுலை மாதம் 16-ம் தேதியன்று எண்ணப்பட்ட உண்டியல் வருமானம் 57 லட்சத்து 21 ஆயிரத்து 128 ரூபாய் (ரூ.57,21,128) ஆகும். ஜுலை மாதம் 29-ம் தேதியன்று எண்ணப்பட்ட உண்டியல் வருமானம் 34 லட்சத்து 62 ஆயிரத்து 594 ரூபாய் (ரூ. 34,62,594) ஆகும்.இது போக கோசாலை உண்டியல் ரூ. 21,204, திருக்கோயில் அன்னதான உண்டியல் ரூ. 5,32,075, யானை பராமரிப்பு ரூ. 6,401, சிவன் கோயில் உண்டியல் ரூ. 3,524, நாசரேத் பிள்ளையார் கோவில் அன்னதானம் ரூ. 1,271, கிருஷ்ணாபுரம் ரூ. 2,198-ம் வரவாகியிருந்தது. மொத்தமாக இம்மாதம் மட்டும் 1 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரத்து 395 ரூபாயும் (ரூ.97,50,395), 865 கிராம் தங்கமும், 9605 கிராம் வெள்ளியும் 11,930 கிராம் பித்தளையும், 780 கிராம் செம்பும், வெளிநாட்டு கரன்சிகள் 103-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
ஜுலை மாதம் 31-ம் தேதி வரை திருக்கோவில் உள்துறை அலுவலகம் மூலம் ரூ. 53 லட்சத்து 44 ஆயிரத்து 265 ரூபாயும், பக்தர்கள் தங்கும் விடுதி மூலம் ரூ. 26 லட்சத்து, 23 ஆயிரத்து, 530-ம் வரவாகியிருந்தது. மொத்தமாக ஜீலை மாதம் மட்டும் திருக்கோவில் உண்டியல், உள்துறை, மற்றும் விடுதி மூலம் ரூ. 1 கோடியே 77 லட்சத்து 18 ஆயிரத்து 190 ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது.
இது குறித்து திருக்கோவில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சிப்பணிகள் குறித்து தக்கார் ப.தா.கோட்டைமணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தேவைக்காக ரு. 87 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சண்முகவிலாசம் மண்டபத்தில் இருந்து மூவர்சமாது வரை நடைபாதை அமைக்கும் பணி இன்னும் ஒரு வார காலத்திற்குள் பூமி பூஜையுடன் தொடங்க உள்ளது. மூவர் சமாது அருகில் 12 அறைகள் கொண்ட தங்கும் விடுதியில் ரூ. 3 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பில் பராமரிப்பு பணியும், ரூ. 4லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அன்னதான மண்டபம் முதல் யானை மண்டபம் வழியாக வேலவன் விடுதி வரை கழிவு நீர் குழாய் அமைக்கும் பணியும், ரூ. 3 லட்சம் மதிப்பில் கோவில் புதிய பேரூந்து நிலையத்தில் உள்ள சுகாதார வளாகத்திற்கு தனியாக உறிஞ்சி நீர் தொட்டி அமைக்கப்பட உள்ளது. இது போக ஆவணித்திருவிழாவிற்கு தகர சீட்டினாலான பந்தல் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது.
ரூ. 18 ஆயிரம் மதிப்பில் பணியாளர்கள் குடியிருப்பும், ரூ. 39 ஆயிரம் மதிப்பில் தெப்பக்குளமும் பராமரிக்கப்பட உள்ளது. இது போக ரூ. 4 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் கலையரங்கம் பின்புறத்தில் வாகனநிறுத்தத்திற்காக கற்கள் அமைக்கும்பணியும், ரூ. 4 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பில் சிறுகுடில் முதல் ஏ.டிஎம் முகப்பு வரை கான்கிரீட் சாலை அமைக்கும் பணியும், 96 ஆயிரம் மதிப்பில் சுகாதார வளாகத்தினை பழுதுபார்க்கும் பணியும், ரூ. 4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் சூரசம்ஹாரமூர் த்தி சன்னதி மேல வாசல் விநாயகர் சன்னதியில் எஸ்.எஸ்.கேட்டுகள் அமைக்கப்பட உள்ளது. ரூ. 4 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் உள்பிரகார மகா மண்டபத்தில் உள்ள சன்னதி கதவுகள் எஸ்.எஸ். கோண்டு புதியதாக அமைக்கப்பட உள்ளது. ரூ. 3 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் விடிந்தகரை சித்தி விநாயகர் கோவிலில் திருப்பணிகளும் நடைபெற உள்ளது. மொத்தத்தில் ரூ. 1 கோடியே 26 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் வளர்ச்சிப்பணிகள் நடைபெற உள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...