மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பல்கலை மாணவியர்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் போலீஸில் ஒப்படைப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல்புல மாணவியர்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் ஒருவர் அம்மாணவியர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களால்

News image
Updated On :2 ஆகஸ்ட் 2013, 3:14 pm

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல்புல மாணவியர்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் ஒருவர் அம்மாணவியர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பேராசிரியரிடம் அண்ணாமலைநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் பாப்பாநாட்டைச் சேர்ந்த தனபால் மகன் தனுஸ்ரீ (17), மயிலாடுதுறை அருகே வானதிராஜபுரத்தைச் சேர்ந்த பீட்டர் குணசேகரன் மகள் பியுலா மெர்லின் தேவப்பிரியா (17) இருவரும்  அண்ணாமலைப் பல்கலைக்கழக ரோஸ் ஹாஸ்டலில் தங்கி பிஇ (எல்க்டாரின்க் சயன்ஸ்) இரண்டாம் ஆண்டு பயிலுகின்றனர். இவர்கள் இருவரிடம் கடந்த சில வாரங்களாக பொறியியல் புலத்தில் பணியாற்றும் சிதம்பரம் பொன்மயில் அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் பேராசிரியர் ஜி.மோகன் (50) பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவியர்கள் இருவரும் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இரு மாணவியர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளனர். அப்போது இரு மாணவியர்களையும் பேராசிரியர் மோகன தனது அறைக்கு அழைத்துள்ளார். அறைக்கு சென்ற இரு மாணவியர்களிடம் அருகே உள்ள புத்தூர் ஹோட்டலுக்கு வருமாறு அழைத்து பாலியம் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை பார்த்த அவர்களை பின்தொடர்ந்து சென்ற பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பேராசிரியர் பிடித்து அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் மாணவியர்கள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.