மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரம் அருகே ரயில்வே துறையினரின் "விபத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி": முதலில் சென்ற 108 ஆம்புலன்ஸ்

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மஞ்சுளா ரங்கநாதன் உத்தரவின் பேரில் பாதுகாப்பு அதிகாரி திலீப் உள்ளிட்டோர் விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலில் வந்தனர். சிதம்பரத்திற்கும், கிள்ளைக்கும் நடுவே

News image
Updated On :6 ஆகஸ்ட் 2013, 1:12 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே ரயில்வே துறையினர் விபத்து பாதுகாப்பு குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தியதால் விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மஞ்சுளா ரங்கநாதன் உத்தரவின் பேரில் பாதுகாப்பு அதிகாரி திலீப் உள்ளிட்டோர் விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலில் வந்தனர். சிதம்பரத்திற்கும், கிள்ளைக்கும் நடுவே உள்ள மடுவங்கரையில் மாலை 4.20 மணிக்கு ரயிலை நிறுத்தி ஆளில்லா ரயில்வே கேட்டில் ரயில் டிராக்டர் மீது மோதி மூவர் படுகாயம் அடைந்ததாக காவல்துறை, 108 ஆம்புலன்ஸ், மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் தகவலை பரப்பினர். இதனால் சிதம்பரம் பகுதியில் ரயில் விபத்திற்குள்ளானது என பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு சிதம்பரத்திலிருந்து முதலில் 108 ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. அதன் பின்னர் கிள்ளை ரயில்வே நிலைய அலுவலர் சக்திவேல் மற்றும் ஊழியர்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் சென்றனர். அப்போது விபத்து பாதுகாப்பு ஒத்திகை என தெரிந்து அனைவரும் திரும்பினர். பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியால் விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக சென்றது. அதேபோல் மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் செல்லும் பாசஞ்சர் ரயில் கிள்ளை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.