கடலில் வீணாக கலக்கும் நீர்: விவசாயிகள் வேதனை
கர்நாடகாவில் அதிகளவு மழை பெய்து அனைத்து அணைகளும் நிரம்பியது. இதனால் மேட்டூருக்கு கூடுதலாக நீர்வரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரியும். எனவே மேட்டூரில் நீர்மட்டம் 80


கீழணையிலிருந்து புதன்கிழமை கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்ட சுமார் 94 ஆயிரம் கனஅடி நீர் வீணாக கடலில் சென்று கலப்பதால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
கர்நாடகாவில் அதிகளவு மழை பெய்து அனைத்து அணைகளும் நிரம்பியது. இதனால் மேட்டூருக்கு கூடுதலாக நீர்வரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரியும். எனவே மேட்டூரில் நீர்மட்டம் 80 அடி இருக்கும் போதே, கடந்த 15 தினங்களுக்கு முன்பே நீரை திறந்து இருந்தால், காவிரி டெல்டா கடை, மடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களை வரை நீர் வந்திருக்கும். ஏரி மற்றும் ஆறு, வாய்க்கால்கள், குளங்கள் நிரம்பியிருக்கும். ஆனால் தற்போது மேட்டூர் நிரம்பிய பின்னர் நீர் திறக்கப்பட்டு சுமார் 94 ஆயிரம் கனஅடி நீர் வீனாக கடலில் சென்று கலக்கிறது. இதற்கு முழுக்காரணம் அரசும், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம்.
முன்கூட்டியே மேட்டூரிலிருந்து நீரை திறந்திருந்தால் வீணாக கடலில் நீர் செல்வதை தடுத்திருக்கலாம். மேலும் அரசும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நீரை தேக்கி வைக்க திட்டங்களை செயல்படுத்தாததுதான் காரணம். கடலூர் மாவட்டத்தில் உள்ள சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படும் மிகப்பெரிய நீராதாரமான வீராணம்ஏரி கடந்த 4 மாதங்களாக வறண்டு கிடக்கிறது. ஆனால் இன்று கீழணையிலிருந்து கொள்ளிடத்தில் சுமார் 94 கனஅடி நீர் திறக்கப்பட்டு வீணாக கடலில் சென்று கலப்பது மிகவும் வேதனையளிக்கிறது என கே.வி.இளங்கீரன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...