சிதம்பரத்தில் கொள்ளையில் ஈடுபட முயன்ற 11 பேர் ஆயுதங்களுடன் கைது!
சிதம்பரம் நகரில் இரவு ரோந்தின் போது கொள்ளை அடிக்க சதித்திட்டம் தீட்டியதாக அரிவாள்களுடன் 11 பேரை நகர போலீஸார் கைது செய்துள்ளனர்.


சிதம்பரம் நகரில் இரவு ரோந்தின் போது கொள்ளை அடிக்க சதித்திட்டம் தீட்டியதாக அரிவாள்களுடன் 11 பேரை நகர போலீஸார் கைது செய்துள்ளனர்.
சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை இரவு ரோந்து சென்றனர். அப்போது கனகசபைநகரில் வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த கும்பலை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மிளகாய் பொடி தூவி, கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியதாக தெரியவந்தது. இதனையடுத்து 11 பேரை நகர போலீஸார் கைது செய்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விபரம்: ஜெகதீசன் (32)- அங்காளம்மன்கோயில் தெரு, பி.முட்லூர், சுரேஷ் (36)- கனகசபைநகர், பழனி (36)-ஞானப்பிரகாசம்தெரு, மூர்த்தி (40)-கொட்டாப்புளிச்சாவடி, பாண்டியன் மகன் மகேஷ் (25)- கனகசபைநகர், விக்னேஷ் (26)- பரங்கிப்பேட்டை அகரம், குமரன் (26)- ஆதனூர், தினேஷ் (23)-கொட்டாப்புளிச்சாவடி, வினோத் (28)-கனகசபைநகர், ராஜசேகர் (28)- கொட்டாப்புளிச்சாவடி, பரமசிவம் மகன் மகேஷ் (25)- கனகசபைநகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...