/

யானைக் கூட்டத்தால் சங்கராபுரம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தின் விளைநிலப் பகுதிகளில் ஒரு குட்டி யானை உள்ளிட்ட 6 யானைகள் கொண்ட கூட்டம் உள்ளே புகுந்து பயிர்களை நாசம் செய்வதாக விவசாயிகள் புகார் கூறினர்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2013, 4:28 am

ச.​ கார்த்​தி​கே​யன்

விழுப்புரம் மாவட்டத்தின் விளைநிலப் பகுதிகளில் ஒரு குட்டி யானை உள்ளிட்ட 6 யானைகள் கொண்ட கூட்டம் உள்ளே புகுந்து பயிர்களை நாசம் செய்வதாக விவசாயிகள் புகார் கூறினர்.

இரு தினங்களுக்கு முன்னர் மலைப் பகுதியில் இருந்து வந்த யானைக் கூட்டம், சங்கராபுரம் பகுதியில் சாலையில் நடந்து செல்வதும், இரவானால் விளை நிலங்களுக்குள் புகுந்து செல்வதுமாக இருக்கிறது. இதனால், பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், பயிர்கள் அதிகம் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் கூறினர். நேற்று இரவு 7.30 மணிக்கு விளைநிலத்தில் புகுந்த யானைக் கூட்டம் இன்று காலை கடவனூர் - வடபொன்பரப்பி சாலையில் சுமார் 6 கி.மீ. தொலைவுக்கு சாலையிலேயே நடந்து சென்றது. இதனால் 2 மணி நேரத்துக்கும் மேலாக அந்தச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

யானைக் கூட்டத்தால் விவசாயிகளும் மக்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.