ஆம்பூரில் டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்த முயன்ற விஜயபாரத மக்கள் கட்சியை சேர்ந்த 24 பேரை ஆம்பூர் டவுன் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் ஈடிகர் தெரு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த குறுகிய தெரு வழியாக நாகநாத சுவாமி திருக்கோயில், இந்து ஆரம்பப் பள்ளி, ஆம்பூர் பஜார் ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். டாஸ்மாக் கடை முன்பு மது அருந்திவிட்டு பலர் அந்த தெருவின் நடுவிலேயே நின்று கொள்கின்றனர். தெரு மிகவும் குறுகியதாக இருப்பதால் மது அருந்திக் கொண்டிருப்பவர்களை கடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் அவ்வழியாக செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். ஆனால் வேறு வழியில்லாமல் அந்த வழியை அவர்கள் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் அந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டுமெனக் கோரி பல மனுக்களை அனுப்பியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதனால் விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதையொட்டி அப்பகுதியில் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்நிலையில் சனிக்கிழமை காலை விஜயபாரத மக்கள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலர் குமரன், தலைமை நிலைய பேச்சாளர் கோபிநாதன், மாவட்ட பொறுப்பாளர்கள் கஜேந்திரன், ஹரிகிருஷ்ணன், மாதனூர், பேர்ணாம்பட்டு ஒன்றிய நிர்வாகிகள் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். அதனால் போலீஸார் அக்கட்சியை சேர்ந்த 24 பேரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

