சிதம்பரம் அதிமுக நகரமன்ற உறுப்பினர் மரணம்!.
சிதம்பரம் பெரிய காஜியார் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் எஸ்.புருஷோத்தமன் (36). அதிமுகவைச் சேர்ந்த இவர் 17-வது வார்டு நகரமன்ற உறுப்பினராக உள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த சில


சிதம்பரத்தில் அதிமுகவைச் சேர்ந்த 17வது வார்டு நகரமன்ற உறுப்பினர் எஸ்.புருஷோத்தமன் இன்று மாலை வீட்டில் இறந்து கிடந்தார்.
சிதம்பரம் பெரிய காஜியார் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் எஸ்.புருஷோத்தமன் (36). அதிமுகவைச் சேர்ந்த இவர் 17-வது வார்டு நகரமன்ற உறுப்பினராக உள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த சில தினங்களாக தொடர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மதியம் தனது கடை உள்ள வணிக வளாகத்தில் வாயில் நுரை தள்ளியபடி கிடந்தார். இதனை பார்த்த அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். புருஷோத்தமனுக்கு மனைவி, ஒரு பெண் குழந்தை உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...