மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அண்ணாமலைப் பல்கலையில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் புலத்தில் பயிலும் மாணவர்களுக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி முற்போக்கு மாணவர்

News image
Updated On :12 ஆகஸ்ட் 2013, 10:44 am

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் புலத்தில் பயிலும் மாணவர்களுக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி முற்போக்கு மாணவர் இயக்கம் சார்பில் மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வி உதவித்தொகை குறித்து தமிழகஅரசின் அராசணையின்படி (எண் 92) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மாணவர்களுக்கு சேர வேண்டிய கல்வி உதவித் தொகையை முழுமையாக வழங்க வேண்டும், எஸ்சி., எஸ்டி மாணவ, மாணவியர்களிடமிருந்து அரசால் நிர்ணயித்த எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது என வலியுறுத்தி பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பொறியியல்புல முதல்வர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொறியியல் புல முதல்வர் வேலுசாமி, பல்கலைக்கழக எஸ்சி., எஸ்டி பிரிவு ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கல்வி உதவித்தொகை முழுமையாக பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் ஒரு மணி நேரம் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.