மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக கொண்டாடுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 26 மாணவர்கள் கைது

அண்ணாமலைநகர் பூமா கோயில் முன்பு ஈழத்தமிழர் பாதுகாப்பு மாணவர் கூட்டமைப்பு மற்றும் மாணவர் விடுதலை இயக்கம் சார்பில் நீதிவள்ளல் தலைமையில் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து இந்தியஅரசு

News image
Updated On :14 ஆகஸ்ட் 2013, 12:22 pm

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைநகர் பூமா கோயில் முன்பு சுதந்திரதினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 26 மாணவர்களை அண்ணாமலைநகர் போலீஸார் கைது செய்தனர்.

அண்ணாமலைநகர் பூமா கோயில் முன்பு ஈழத்தமிழர் பாதுகாப்பு மாணவர் கூட்டமைப்பு மற்றும் மாணவர் விடுதலை இயக்கம் சார்பில் நீதிவள்ளல் தலைமையில் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து இந்தியஅரசு எவ்வித நடவடிக்கை இல்லை. எனவே சுதந்திரதினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிப்பதாக கூறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.உதயகுமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் 26 பேரை கைது செய்தனர். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் சுதந்திரத்தினத்தையும், தேசியக்கொடியையும் அவமதித்ததாக வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.