தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பின்படி கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வீராணம்ஏரியிலிருந்து சென்னை குடிநீர் அனுப்பும் பணி இன்று தொடங்கப்பட்டது.
சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு வடக்குத்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து புதிய வீராணம் திட்டத்தின் மூலம் சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் அனுப்பும் பணியை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத் தலைவர் ஏ.அருண்மொழிதேவன், மெட்ரோ குடிநீர் திட்ட மேலாண் இயக்குநர் சந்திரமோகன், கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிவசுப்பிரமணியன், சொரத்தூர் ராஜேந்திரன், செல்வி ராமஜெயம், நாக.முருகுமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2001 ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு ரூ.720 கோடி செலவில் புதிய வீராணம் திட்டத்தை அறிவித்தார். சென்னையிலிருந்து 230 கி.மீட்டர் தொலைவிலுள்ள வீராணம் ஏரியிலிருந்து நீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் புதிய வீராணம் திட்ட பணிகள் 2002 ஆண்டு தொடங்கப்பட்டு, 13-10-2004ல் பணி முடிக்கப்பட்டு அன்று முகல் நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு பருவ மழை பொய்த்தததால் வீராணம்ஏரி வறண்டு 26-4-2013 அன்று நீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மேட்டூர் அணை நிரம்பியதால் தமிழக முதல்வர் உத்தரவின்படி மேட்டூர் அணை ஆக.2-ம் தேதி திறக்கப்பட்டு காவிரி ஆறு மூலம் வடவாறு வழியாக நீர் வீராணம்ஏரியை வந்தடைந்தது. தற்போது வீராணம்ஏரியின் மொத்தக் கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடியில் 1027 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளதால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஜினியின் தன் வரலாறு நூலை எழுதும் பிரபல இயக்குநர்?

அடுத்த 2 நாள்களுக்கு மட்டுமே ஹோட்டல்கள்! மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்கச் செயலாளர்!
மீண்டும் படத்தில் ஹீரோவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்!

ஹிமாசலின் புதிய ஆளுநராக கவிந்தர் குப்தா பதவியேற்பு!
வீடியோக்கள்

#t20wc | டி20 உலகக் கோப்பையின் சிறந்த லெவன்: உங்கள் தேர்வு என்ன? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

