மகளிர் விடுதி நடத்துபவர் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை
ஈரோட்டில் மகளிர் விடுதி நடத்திவருபவர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 25 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர்.


ஈரோட்டில் மகளிர் விடுதி நடத்திவருபவர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 25 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர்.
ஈரோட்டில் இடையன்காட்டு வலசு பகுதியில் மகளிர் விடுதி நடத்தி வருபவர் ரவிக்குமார் (55). இவரது வீடு மூலப்பாளையம் அருகே சந்தா நகரில் உள்ளது. இவருடைய மகள் திருமணமாகி சென்னையில் வசிக்கிறார். மகன் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். இவரது மகளைப் பார்ப்பதற்காக ரவிக்குமாரும் அவரது மனைவியும் வியாழன் அன்று சென்னை சென்றனர். பின்னர் இன்று காலை ரவிக்குமார் வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். பீரோவில் 25 சவரன் நகை திருட்டு போயுள்ளதும் தெரியவந்துள்ளது. இதை அடுத்து அவர் போலீஸில் புகார் அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...