பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பைக் மீது ஜீப் மோதியதில் கூலித்தொழிலாளி பலி

காசிதர்மத்தை சேர்ந்தவர் கோட்டூர்சாமி மகன் முத்துப்பாண்டி(22).கூலி வேலை செய்து வருகிறார்.இன்று முத்துப்பாண்டியும்,அவரது உறவினர் சந்தானமும் பைக்கில் கடையநல்லூருக்கு சென்று விட்டு மீண்டும்

News image
Updated On :18 ஆகஸ்ட் 2013, 11:05 am

குமார முருகன்

கடையநல்லூர் அருகே பைக் மீது ஜீப் மோதியதில் கூலித்தொழிலாளி இறந்தார்.

காசிதர்மத்தை சேர்ந்தவர் கோட்டூர்சாமி மகன் முத்துப்பாண்டி(22).கூலி வேலை செய்து வருகிறார்.இன்று முத்துப்பாண்டியும்,அவரது உறவினர் சந்தானமும் பைக்கில் கடையநல்லூருக்கு சென்று விட்டு மீண்டும் காசிதர்மத்திற்கு சென்று கொண்டிருந்தனராம்.அவர்கள் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்ற பொழுது,கேரளாவிலிருந்து,புதுக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜீப் மோதியதாம்.இதில் பலத்த காயமடைந்த முத்துப்பாண்டி மற்றும் சந்தானம் ஆகிய இருவரும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் சிகிச்சை பலனின்றி முத்துப்பாண்டி இறந்தார்.

கடையநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜீப் ஓட்டுநரான குளத்துப்புழையைச் சேர்ந்த சதீஸ்குமாரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.