ஆனைமலையில் இருந்து கும்கி யானைகள் திருவண்ணாமலை வந்தன
தமிழகத்தில் மக்கள் வாழும் கிராமப் பகுதிகளில் சுற்றித் திரியும் 6 காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து இரண்டு கும்கி யானைகள் திருவண்ணாமலை வந்துள்ளன.


தமிழகத்தில் மக்கள் வாழும் கிராமப் பகுதிகளில் சுற்றித் திரியும் 6 காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து இரண்டு கும்கி யானைகள் திருவண்ணாமலை வந்துள்ளன.
ஒரு குட்டி யானை உட்பட 6 காட்டு யானைகள் கடந்த 20 வருடங்களாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் சுற்றித் திரிகின்றன.
இவை, ஆந்திர மாநில வனப்பகுதியைச் சேர்ந்தவை. சென்னை - பெங்களூரு இடையே தங்க நாற்புரச் சாலை அமைக்கப்பட்ட போது, ஆந்திர வனப்பகுதிக்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு விட்டதால் அவை ஆந்திரா செல்ல முடியாமல் தமிழகப் பகுதியிலேயே சுற்றிக் கொண்டிருக்கின்றன.
இதனால், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விளை நிலங்கள் சேதம் ஏற்படுத்துவதும், விவசாயிகள் உயிரிழப்பு ஏற்படுவதும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதுமாக இருந்து வருகிறது.
எனவே இந்த 6 யானைகளையும் கும்கி யானைகள் மூலமாக மயக்க ஊசி போட்டு பிடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்த கபில்தேவ், கலீம் என்ற பெயருடைய இரண்டு கும்கி யானைகள் திருவண்ணாமலை அருகே உள்ள மேல் செங்கம் பகுதியில் அமைந்துள்ள மத்திய விவசாய பண்ணைக்கு சனிக்கிழமை காலை வரவழைக்கப்பட்டுள்ளன.
இப்பணிக்கு மேலும் 4 கும்கி யானைகள் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து இன்று இரவுக்குள் வரவழைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அவைகளும் வந்து விட்ட பிறகு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு மேல் காட்டு யானைகளை பிடிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.
தற்போது திருவண்ணாமலையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள தண்டலாம்பட்டு, ராவந்தவாடி கிராமத்தில் காட்டு யானைகள் சுற்றிக்கொண்டுள்ளன. இதனை இன்று மதியத்தில் இருந்து மத்திய விவசாய பண்ணைப் பகுதிக்கு விரட்டும் பணியில் வனத் துறையினர் ஈடுபட உள்ளனர்.
அங்கு காட்டு யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தி, அவைகளை கும்கி யானைகளை வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...