சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீகைலாஷ் மானசரோவர் ராஜ யாத்திரைக்குழு சார்பில் திருக்கைலாயம் சென்று திரும்பியவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.விழாவில் திருக்கயிலாயம் சென்று வந்தவர்கள் 110 பேருக்கும், பாரத் பரிக்ரிமம் செய்தவர்களுக்கும் பட்டம் வழங்கப்பட்டது. முதல் முறை திருக்கைலாயம் சென்று வந்தவர்களுக்கு கயிலைமணி என்ற பட்டமும், இரண்டாம் ஆண்டு திருக்கைலாயம் சென்று வந்தவர்களுக்கு கயிலைநாதர் என்ற பட்டமும், மூன்றும், அதற்கு மேல் சென்று வந்தவர்களுக்கு கயிலைவாசி என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
விழாவிற்கு ஆடிட்டர் கே.நடராஜபிரபு தலைமை வகித்தார். கைலாஷ் யாத்திரைக்குழு ஒருங்கிணைப்பாளர் பி.பாலகிருஷ்ணன் வரவேற்றார். வடலூர் ஊரன்அடிகளார் விழாவில் பங்கேற்று திருக்கயிலாயம் யாத்திரை சென்று வந்தவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பாராட்டினார். சித்தூர் நகரியைச் சேர்ந்த சிவானந்த யதீந்திர சுவாமி ஆசிரமம் ஸ்ரீலஸ்ரீ சுவாமி சரணானந்தா ஆசியுரை வழங்கினார். விருத்தாசலம் ஆர்.வைத்தியநாதன் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கடலூர் ஆர்.சிவராமன், ஜி.மேகநாதன், டாக்டர் கே.நாராயணன், வி.கே.கணபதி, எம்.நாகராஜ் குருக்கள், தமிழ்நாடு நுகர்வோர் குழுமச் செயலர் சி.டி.அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு... மௌனம் கலைக்குமா பாஜக? டிகே சிவக்குமார் கேள்வி!

ரஜினியின் தன் வரலாறு நூலை எழுதும் பிரபல இயக்குநர்?

அடுத்த 2 நாள்களுக்கு மட்டுமே ஹோட்டல்கள்! மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்கச் செயலாளர்!
மீண்டும் ஹீரோவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்!
வீடியோக்கள்

#t20wc | டி20 உலகக் கோப்பையின் சிறந்த லெவன்: உங்கள் தேர்வு என்ன? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

