சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தாவரவியல்துறையில் 1989-91 ஆண்டு பயன்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 22 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை நடைபெற்றது. சந்திப்பு நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களான ஹைதராபாத்தில் உள்ள விஞ்ஞானி இளங்கோவன், குஜராத்தில் உள்ள விஞ்ஞானி ஆஸ்வின், கேரளாவில் உள்ள பேராசிரியர் அனில்குமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சபா.ராஜேந்திரன் துணைவியார் அங்கையர்கன்னி, அண்ணாமலைப் பல்கலை. இணைப் பேராசிரியர் டி.தனவேல், சீத்தாராமன், இளங்கோவன் உள்ளிட்ட 56 பேர் குடும்பத்தினருடன் பங்கேற்று தங்களது கல்லூரி கால நினைவுகளையும், தற்போதைய நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டனர்.