புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

டிக்கெட் பரிசோதகரை தாக்கிய மலையாள வில்லன் நடிகர் கைது

இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் பயணம் செய்தார் மலையாள வில்லன் நடிகர் மனோஜ் குமார் (50).  அந்த ரயிலில் முன்பதிவு செய்யப்பட்டிருந்த பெட்டியில் இவர் பயணம் செய்தார். அதில் முன்பதிவு செய்யாத பயணிகள் சிலர் ஏறினர

News image
Updated On :26 ஆகஸ்ட் 2013, 5:36 am

ஜபலின் ஜான்

டிக்கெட் பரிசோதகருடன் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கியதாக மலையாள வில்லன் நடிகர் கைது செய்யப்பட்டார்.

நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் பயணம் செய்தார் மலையாள வில்லன் நடிகர் மனோஜ் குமார் (50).  அந்த ரயிலில் முன்பதிவு செய்யப்பட்டிருந்த பெட்டியில் இவர் பயணம் செய்தார். அதில் முன்பதிவு செய்யாத பயணிகள் சிலர் ஏறினராம். அதனால் அவர்களுக்கும் மனோஜ் குமாருக்கும் வாக்குவாதம் எழுந்தது. டிக்கெட் பரிசோதகர் கிருஷ்ணமூர்த்தி தலையிட்டு பிரச்னையை தீர்த்துவைக்க முயன்றுள்ளார். அப்போது தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், டிக்கெட் பரிசோதகரை நடிகர் மனோஜ் குமார் தாக்கினாராம். இந்த ரயில் நள்ளிரவு 1 மணி அளவில் ஈரோடு வந்தது. ஈரோடு ரயில் நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், மனோஜ் குமாரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.