போலீஸ் எஸ்.ஐ யை கண்டித்து வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு
மானாமதுரை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றும் ராம்நாத் இங்குள்ள சிப்காட் காவல் நிலையத்துக்குச் சென்றபோது அங்கு பணியிலிருந்த எஸ்.ஐ தவமுனி வழக்குரைஞர் ராம்நாத்தை அவதூறாக


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் எஸ்.ஐ யை கண்டித்து திங்கள்கிழமை வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
மானாமதுரை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றும் ராம்நாத் இங்குள்ள சிப்காட் காவல் நிலையத்துக்குச் சென்றபோது அங்கு பணியிலிருந்த எஸ்.ஐ தவமுனி வழக்குரைஞர் ராம்நாத்தை அவதூறாக பேசினாராம். இதையடுத்து மானாமதுரை வழக்குரைஞர்கள் சங்கத்தில் எஸ்.ஐ தவமுனியைக் கண்டித்து நீதிமன்றப் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்தனர். அதன்படி மானாமதுரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களின் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதனால் இந் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நடைபெறாமல் பணிகள் பாதிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...