வாழப்பாடி அருகே 270 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து அழிப்பு
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 270 கிலோ கஞ்சா பயிர் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு தீவைத்து அழிக்கப்பட்டது.


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 270 கிலோ கஞ்சா பயிர் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு தீவைத்து அழிக்கப்பட்டது.
வாழப்பாடி அருகே அருணூத்துமலை கிராமத்தில், கஞ்சா பயிர் விளைவிக்கப்படுவதாக சேலம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பி பிரிவு போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை அடுத்து, சோதனை மேற்கொள்வதற்காக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி ராமு தலைமையில் போலீஸார் அந்த கிராமத்துக்குச் சென்றனர். அப்போது, சின்னவேலாம்பட்டி என்ற கிராமத்தில் கோவிந்தன் (55) என்பவர், மஞ்சள் பயிருக்கு நடுவே ஊடு பயிராக கஞ்சா பயிரிட்டிருந்தார். அவ்வாறு மஞ்சள் பயிருக்கு நடுவே இருந்த 122 செடிகள், சுமார் 260 கிலோ எடை கொண்டது கண்டறியப்பட்டது.
மேலும், அதற்கு அடுத்து இருந்த, மாணிக்கம் (47) என்பவரின் தோட்டத்தில் மஞ்சள் பயிருக்கு நடுவே, ஊடுபயிராக 40 செடிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இவற்றின் எடை 10 கிலோ. ஆக மொத்தம் 270 கிலோ
கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை தீ வைத்து அழிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் என போலீஸார் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...