நரேந்திர மோடி புகழை வீடுகள் தோறும் பரப்ப பா.ஜ.க திட்டம்
லாஸ்பேட்டை தொகுதி பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொகுதி தலைவர் கே.முருகன் தலைமை தாங்கினார். அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு தலைவர் அங்கமுத்து


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி புகழை வீடுகள் தோறும் பரப்ப பா.ஜ.கவினர் திட்டமிட்டுள்ளனர்.
லாஸ்பேட்டை தொகுதி பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொகுதி தலைவர் கே.முருகன் தலைமை தாங்கினார். அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு தலைவர் அங்கமுத்து வரவேற்றார். நிர்வாகிகள் எல்.கருணாகரன், ஜி.கெüரிசங்கர் முன்னிலை வகித்தனர்.மாநில தலைவர் எம்.விஸ்வேஸ்வரன், பொதுச் செயலர் ஆர்வி.சாமிநாதன், முன்னாள் தலைவர் பிகே.தாமோதர் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வரும் 2014-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தோற்கடிக்க வேண்டும்.புதுவையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நாராயணசாமி எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு எதுவும் செய்யவில்லை. காங்கிரஸ் அரசின் ஊழல்கள், முறைகேடுகளை மக்களிடம் விளக்க வேண்டும்.வரும் தேர்தலை பயன்படுத்தி மக்கள் நரேந்திர மோடியை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும்.
புதுவையில் பல்வேறு ஆலைகள் மூடப்பட்டு விட்டன. சாலை வசதிகள் மிகவும் மோசமாக உள்ளன. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை முதல்வர் ரங்கசாமி,நாராயணசாமி இருவரும் நிறைவேற்றவில்லை.நரேந்திர மோடியின் புகழை வீடுகள் தோறும் பரப்ப வேண்டும். காங்கிரஸ் அரசின் முறைகேடுகளை கிராமங்கள் தோறும் கொண்டு செல்ல வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...