ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பள்ளியில் மாணவிகளுக்கு கணினியில் ஆபாச படம் காண்பித்த பிரச்னை: 4 ஆசிரியர்கள் தலைமறைவு

புதுச்சேரி அடுத்த அரும்பார்த்தபுரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 500-க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில்

News image
Updated On :5 டிசம்பர் 2013, 1:50 pm

சுஜித்குமார்

அரும்பார்த்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கணிணியில் ஆபாச படம் காண்பித்த பிரச்னை தொடர்பாக புதுவை சிஐடி போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி அடுத்த அரும்பார்த்தபுரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 500-க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 2 நாள்களுக்கு முன்பு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் மாணவிகளுக்கு கம்ப்யூட்டரில் ஆபாசப் படங்களை காண்பித்து பார்க்குமாறு வற்புறுத்தினார்களாம்.

இதுதொடர்பாக மாணவிகள் தங்கள் வீடுகளில் புகார் கூறினர். இதையடுத்து கடந்த நவம்பர் 28-ஆம் தேதி மாணவிகளின் பெற்றோர் திரண்டு பள்ளி முன்பு முற்றுகை போராடடம் மேற்கொண்டனர்.

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் இ.வல்லவன், முதன்மைக் கல்வி அலுவலர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் அரும்பார்த்தபுரம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஆசிரியர்கள் அப்துல் மாலிக், ரஷீத் முகமது, அன்பரசன், சிவக்குமார் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

வழக்குப்பதிவு

இந்நிலையில் அரும்பார்த்தபுரம் பள்ளி சம்பவம் தொடர்பாக ஆசிரியர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள்,அமைப்புகள் வலியுறுத்தின.

இதற்கிடையே புதுவை சிஐடி போலீஸார் அரும்பார்த்தபுரம் பள்ளிச் சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம், குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவு போன்ற பிரிவுகளின் வழக்குப்பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.