மழையில் சேதமுற்ற சிதம்பரம் சாலைகளை சீரமைக்க மதிமுக கோரிக்கை
சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் பருவ மழையால் சேதமுற்ற சாலைகளை போர்க்கால் அடிப்படையில் உடனடியாக செப்பணியிட வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.


சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் பருவ மழையால் சேதமுற்ற சாலைகளை போர்க்கால் அடிப்படையில் உடனடியாக செப்பணியிட வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிதம்பரம் நகர மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடலூர் மாவட்டச் செயலாளர் என்.ராமலிங்கம் தலைமை வகித்தார். நகர இளைஞரணி அமைப்பாளர் க.திருநாவுக்கபசு, மாவட்ட பிரதிநிதி பழக்கடை எல்.ஜெயபால், நகர அவைத்தலைவர் ரத்தின.சொக்கலிங்கம், பெ.ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபனண், வெளியீட்டு அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.வி.மோகனசுந்தர், மாவட்ட அவைத் தலைவர் கு.பெருமாள், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் ஏ.என்.குனசேகரன், மாநில மாணவரணிச் செயலாளர் ராச.எழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர தலைவர் (பொறுப்பு) அ.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்: சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; நகரில் 33 வார்டுகளை தவிர மற்ற அனைத்து வார்டுகளிலும் புதிய அமைப்பினை உருவாக்குவது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...