பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடையநல்லூர் பெரியாற்றுப் பாதையில் கொட்டப்படும் மாத்திரைகள்: சிறுவர்கள் சாப்பிடும் வாய்ப்புள்ளதால் மக்கள் அதிர்ச்சி

கடையநல்லூரிலிருந்து, பெரியாற்றுக்குச் செல்லும் பாதையில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2013, 6:58 am

குமார முருகன்

கடையநல்லூரிலிருந்து, பெரியாற்றுக்குச் செல்லும் பாதையில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியாற்றுக்குச் செல்லும் சாலையில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்தப் பாதையில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளன. இந்தச் சாலை வழியாகத்தான் ஏராளமானோர் ஆற்றில் குளிக்கச் செல்வார்கள். மேலும் விவசாய நிலங்களுக்கும் இதன் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

இந்நிலையில், குளிப்பதற்காக பள்ளி மாணவர்கள் இந்த வழியாகச் செல்லும் போது, கொட்டிக் கிடக்கும் மாத்திரைகளை தவறுதலாக சாப்பிடும் வாய்ப்பு உள்ளது. அப்படி சாப்பிடும் நிலையில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயமும்  உள்ளது.

எனவே, உடனடியாக மாத்திரைக் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், காலாவதியான மாத்திரைகளை முறையாக அப்புறப்படுத்த மருந்துக் கடைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.