அருப்புக்கோட்டையில் இளம் பெண் பலாத்காரம்
அருப்புக்கோட்டை வேல்முருகன் காலணியைச்சேர்ந்தவர் ரத்தினசாமி என்பவரது மகள் பாண்டியம்மாள் வயது 16. இவர் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைக்குச்சென்று வருகிறார்.


அருப்புக்கோட்டை வேல்முருகன் காலணியைச்சேர்ந்தவர் ரத்தினசாமி என்பவரது மகள் பாண்டியம்மாள் வயது 16. இவர் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைக்குச்சென்று வருகிறார். தினசரி இரவு பணி முடிந்ததும் இவரைப் பாதுகாப்பாக கடை நிர்வாகத்தினர் கொண்டு சென்று பாண்டியம்மாளின் வீட்டருகே உள்ள காலணியில் இறக்கி விட்டு விடுவராம்.
சம்பவத்தன்றும் இரவில் காலணியில் இறக்கி விடப்பட்ட பாண்டியம்மாளை அதே பகுதியைச்சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சந்திர மோகன் (23) என்பவர் மறைந்திருந்து பாண்டியம்மாளைக்கடத்திச்சென்று பலாத்காரம் செய்து விட்டார்.பாண்டியம்மாளின் தந்தை அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் படி காவல்துறையினர் சந்திர மோகனைக்கைது செய்து விசாரித்து வருகின்றனர்.அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பணி காலியாக உள்ளது.எனவே நகர காவல் ஆய்வாளர் கே.கே.பாலச்சந்தர் வழக்கை விசாரித்து வருகிறார்.
அருப்புக்கோட்டையில் நடந்த இந்த துணிகரச்சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...