/

திருக்கோவிலூர் அருகே ஏரியில் மணல் அள்ளிய குழியில் தேங்கிய நீரில் மூழ்கி 3 சிறார்கள் பலி

திருக்கோவிலூர் அருகே காட்டு எடையூர் கிராமத்தைச் சேர்ந்த 3 சிறார்கள் நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், ஆடுகளை மேய்த்துக் கொண்டு வயல் பகுதியில் சென்றனர். பின்னர் அங்கிருந்த ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, ஏரியில்

News image
Updated On :9 டிசம்பர் 2013, 4:25 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர் அருகே காட்டு எடையூர் கிராமத்தைச் சேர்ந்த 3 சிறார்கள் நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், ஆடுகளை மேய்த்துக் கொண்டு வயல் பகுதியில் சென்றனர். பின்னர் அங்கிருந்த ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, ஏரியில் மணல் எடுக்கப்பட்டு மூடப்படாமல் விட்டுச் செல்லப்பட்டிருந்த குழியில் தேங்கிய நீரில், ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் 7ம் வகுப்பு பயிலும் மாணவி மீனா, 3ம் வகுப்பு படிக்கும் ஐயப்பன், 8ம் வகுப்பு படிக்கும் அம்பிகா ஆகியோர் என்று தெரியவந்தது. நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், அந்தப் பகுதியில் மக்கள் சென்று பார்க்கவில்லையாம். இன்று காலை ஏரிப் பகுதிக்குச் சென்றபோது, இந்த விவரம் தெரியவந்துள்ளது. இதை அடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.