அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஆசிரியர்களுக்கு தொழில் வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

ஆசிரியர்களுக்கு வருமானவரி மற்றும் தொழில்வரி ஆகிவற்றிலிருந்து முற்றிலும் விலக்க அளிக்க வேண்டும் என அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :11 டிசம்பர் 2013, 7:55 am

ஜி.சுந்தரராஜன்

ஆசிரியர்களுக்கு வருமானவரி மற்றும் தொழில்வரி ஆகிவற்றிலிருந்து முற்றிலும் விலக்க அளிக்க வேண்டும் என அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு கலந்தாய்வுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில இணைச் செயலாளர் ரா.காவியச்செல்வன் தலைமை வகித்தார். மு.ஆ.தமிழ்க்குமரன் வரவேற்றார். பழனிவேல்ராஜன், சுபாஷ், அ.ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் ப.பெருஞ்சித்தன், பொறியாளர் அ.கலியபெருமாள், ஜெ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று பேசினர். ரா.ஜெயசீலன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்: ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 60-ஆக உயர்த்த வேண்டும், வருவாய்த்துறையிலிருந்து, ஆதிதிராவிட நலத்துறையை தனியாக பிரித்து தனி இயக்குநரகமாக அமைக்க வேண்டும், பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆறாவது ஊதியக்குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளை உடன் களைய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.