சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேர்களை ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறையினர்!
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த டிச.9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிச.17-ம் தேதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது. கோயிலுக்கு


சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேர்களை கடலூர் மாவட்ட பொதுப்பணித்துறையினர் (கட்டடப்பிரிவு) புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த டிச.9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிச.17-ம் தேதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது. கோயிலுக்கு ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமசுந்தரி, ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு 5 தனி, தனி தேர்கள் உள்ளன. இந்நிலையில் ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமசுந்தரி தேர்கள் பழுதுற்று பச்சையப்பன் அறக்கட்டளை மற்றும் பொதுதீட்சிதர்களால் பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சிவகாமி அம்மன் தேர் பிரித்து போடப்பட்டுள்ளதால் கடந்த ஆனித்திருமஞ்சனத்தின் போது ஸ்ரீசுப்பிரமணியர் தேரில் ஸ்ரீசிவகாமி அம்மன் வீதிவலம் வந்தார். இந்நிலையில் ஸ்ரீநடராஜர் தேர் பழுது நீக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரேம்சந்தர், உதவி செயற்பொறியாளர் வைத்தியநாதன், உதவிப் பொறியாளர் மணிவண்ணன் ஆகியோர் புதன்கிழமை ஸ்ரீநடராஜர் கோயில் தேர்களை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோயில் செயல்அலுவலர் க.முருகன், பொதுதீட்சிதர்களின் செயலாளர் காசிராஜ தீட்சிதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆய்வு மேற்கொண்ட செயற்பொறியாளர் ஸ்ரீநடராஜர் தேரினை பழுது நீக்கம் செய்தால்தான் தரச்சான்று தரப்படும் என தெரிவித்தார். அதற்கு தீட்சிதர்கள் மூன்று தினங்களுக்குள் பழுது நீக்கி சரி செய்துவிடுவதாக தெரிவித்தனர். மூன்று தினங்களுக்குள் பழுது நீக்கிய பிறகு ஆய்வு செய்து ஸ்ரீநடராஜர் தேருக்கு தரச்சான்று தருவாத பொதுதீட்சிதர்களிடம், செயற்பொறியாளர் பிரேம்சந்தர் தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...