தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 11 பேர் தனியாக அடைக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :13 டிசம்பர் 2013, 12:49 pm

முத்துகுமார்

:பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் சிலர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 11 பேர் தனியாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனியாக உணவு தயாரித்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில், தனியாக உணவு தயாரிக்க சிறை நிர்வாகம் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து அந்தக் கைதிகள் வெள்ளிக்கிழமை காலை உணவு சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதைத்தொடர்ந்து சிறைக் கைதிகள் மதிய உணவு சாப்பிட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.