இளைஞர்கள் விவசாயத்தை நேசிக்க வேண்டும்: விவேக்
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் கிராம உதயம், கிரீன் குளோப் அமைப்புகள் சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில்


இளைஞர்கள் விஞ்ஞானம் படித்தாலும், விவசாயத்தை மறக்கக் கூடாது. நேசிக்க வேண்டும் என நடிகர் விவேக் குறிப்பிட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் கிராம உதயம், கிரீன் குளோப் அமைப்புகள் சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றி தலைமை வகித்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பேசியதாவது: நகைச்சுவை மூலம் மக்களிடையே பகுத்தறிவு சிந்தனைகளை நடிகர் விவேக் கூறி வருகிறார். பகுத்தறிவு கருத்துக்களை தெரிவிப்பதில் தந்தை பெரியாரின் வாரிசாக அவர் திகழ்கிறார். முதல்வர் ஜெயலலிதா தனது பிறந்த தினத்தையொட்டி தமிழகத்தில் மரக்கன்றுகளை நட்டு பசுமை புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். கிராம உதயம் அமைப்பின் சேவை மகத்தானது என்றார் அவர்.
நடிகர் விவேக் பேசியதாவது:
தமிழகத்தில் இதுவரை 20.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களை சந்தித்து வந்த நான் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கிராம உதயம் அமைப்பின் மூலம் விவசாயிகளை சந்தித்து மரக்கன்றுகள் வழங்கி வருகிறேன். 50 வருடங்களுக்கு முன்பு வெளியே சென்றால் சட்டை கசங்காமல் வீடு திரும்பினர். இப்போதெல்லாம் வெளியே சென்றால் நிறம் மாறி திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் அந்தளவுக்கு சுற்றுச்சூழல் மாசுபட்டுள்ளது.
வெப்பம் அதிகரித்து குளிர்ச்சி குறைந்த காரணத்தால் மழை இல்லை. மழை பெய்யாத காரணத்தால் நிலத்தடி நீர்ஆதாரம் இல்லை. விவசாயம் அழிந்து வருகிறது. விளை நிலங்களை விற்கும் நிலை மாற வேண்டும். ரசானய உரங்களை இட்டு கிருமிகளை மட்டும் அழிக்கவில்லை. மண்ணின் தன்மை போன்ற தழைச்சத்துக்களை இழந்து விட்டோம்.
விஞ்ஞானத்தை நோக்கி செல்லும் இளைஞர்கள் விவசாயத்தை நேசிக்க வேண்டும். விளை நிலங்கள் தலைமுறை தலைமுறையாக நம்மை வாழ வைக்கும். மரங்கள் ஆக்சிஜனை தருகிறது. அதன் மூலம் மாசற்ற காற்றை சுவாசிக்க முடியும். வீரமும், அறிவும், புலமையும் மிக்க நெல்லை சீமை. தாமிரவருணி தண்ணீர் குடித்தால் தவறு செய்ய மாட்டான். இங்குள்ள மக்கள் உழைப்பாளிகள். தமிழ்பண்பாட்டை வளர்த்த தாமிரவருணி.விவசாயம் குறைந்து விவசாயிகள் ரேசன் அரிசிக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். வீட்டு ஒரு மரம் வளர்க்க வேண்டும். மரங்கள் மனித சமுதாயத்தை காப்பாற்றும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் கிராம உதயம் இயக்குநர் வே. சுந்தரேசன், மேலாளர் எஸ். தமிழரசி, கிரீன் குளோப் அமைப்பின் தலைமை ஒருங்கிணை்ப்பாளர் கே. அப்துல்கனி, பேரூராட்சித் தலைவர் ஏ.பி. அருணாசலம், வழக்குரைஞர் புவனேஸ்வரன், தொழிலதிபர் நாகஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் பகத்சிங் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...