கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

பொங்கல் பண்டிகை: வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்பப்படும் பன்னீர் கரும்பு

குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் வல்லம்படுகை, கடவாச்சேரி, அத்திப்பட்டு, பழஞ்சநல்லூர், வேளக்குடி, பூலாமேடு, சாலியாந்தோப்பு உள்ளிட்ட கிராமங்களில் பொங்கல்

News image
Updated On :16 டிசம்பர் 2013, 9:04 am

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்காக பன்னீர் கரும்பு அறுவடை செய்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. கரும்புக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் வல்லம்படுகை, கடவாச்சேரி, அத்திப்பட்டு, பழஞ்சநல்லூர், வேளக்குடி, பூலாமேடு, சாலியாந்தோப்பு உள்ளிட்ட கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்காக பன்னீர் கரும்பு பயிரிட்டிருந்தனர். இந்த கரும்பு பொங்கல் பண்டிகைக்காக சென்னை, வேலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் வியாபாரிகள் ஆண்டு தோறும் வாங்கிச் செல்வது வழக்கம். இவையல்லாமல் புரோக்கர்கள் மூலம் சூரத், ஆந்திராவில் உள்ள விஜயவாடா, மசூலிப்பட்டினம், நெல்லூர், குண்டூர், திருவணாமலை, வேலூர், பெங்களூர், காஞ்சிபுரம், ஆரணி செஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு கரும்புகள் லாரிகளில் அனுப்பப்படுகிறது.

இந்த ஆண்டு கன மழை மற்றும் காற்றினால் கடலூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் கரும்புகள் சாய்ந்துவிட்டகு. இதனால் கருப்பின் விலை குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு ஒரு கரும்பு ரூ.12-க்கும் விற்கப்பட்டது. இந்த ரூ.8-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக புரோக்கர்கள் மூலம் வியாபாரிகள் 100 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு 820-க்கு வாங்கி செல்லுகின்றனர். பன்னீர் கரும்பு பயிரிட ஒரு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் செலவாகிறது. ஆனால் லாபம் ரூ.15 ஆயிரம்தான் கிடைக்கிறது. போதிய விலை கிடைக்காததால் கரும்பு பயிரிடும் ஆர்வம் குறைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.