அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

நிறுத்தாமல் ஸ்ரீநடராஜர் கோயில்  தேரோட்டம்: இந்து ஆலய பாதுகாப்புக்குழு கண்டனம்

இந்து ஆலய பாதுகாப்புக்குழு அவரச ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் மு.செங்குட்டுவன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சந்திரசேகரன், ஜோதி

News image
Updated On :16 டிசம்பர் 2013, 3:16 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டத்தில் ஸ்ரீநடராஜர் தேரை நிறுத்தாமல் தேரோட்டம் நடத்துவது என்ற முடிவிற்கு இந்து ஆலய பாதுகாப்புக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்து ஆலய பாதுகாப்புக்குழு அவரச ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் மு.செங்குட்டுவன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சந்திரசேகரன், ஜோதி குருவாயூரப்பன், பாலகிருஷ்ணன், நாச்சியப்பன், செல்வி, சங்கரமூர்த்தி, குமார் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தேரோட்டத்தின் போது நடராஜர் தேரில் பொதுப்பணித்துறை கூறிய மாற்றங்கள் அனைத்தும் செய்யப்பட்டும்; தொன்று தொட்டு நடைபெறும் பழக்கவழக்கத்தை மாற்றி வீதிகளில் பக்தர்களின் மண்டகப்படிக்கு தேரை நிறுத்தாமல் தேரோட்டம் நடத்துவதை கடுமையாக கண்டிக்கிறோம்; நடராஜர் தேர் நிறுத்தாமல் தேரோட்டம் நடத்தப்படுவதால் பக்தர்கள் காலையிலேயே நடராஜரை தேரில் தரிசனம் செய்ய வேண்டுகிறோம்;  தேர் எந்த இடத்திலும் கட்டளை (மண்டகப்படி) நிறுத்தாமல் தேரோட்டம் நடத்துவதால் பக்தர்களும், உபயதாரர்களும் கடும் அதிருப்தியும், மனவேதனையும் அடைந்துள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.