குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் வல்லம்படுகை, கடவாச்சேரி, அத்திப்பட்டு, பழஞ்சநல்லூர், வேளக்குடி, பூலாமேடு, சாலியாந்தோப்பு உள்ளிட்ட கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்காக பன்னீர் கரும்பு பயிரிட்டிருந்தனர். இந்த கரும்பு பொங்கல் பண்டிகைக்காக சென்னை, வேலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் வியாபாரிகள் ஆண்டு தோறும் வாங்கிச் செல்வது வழக்கம். இவையல்லாமல் புரோக்கர்கள் மூலம் சூரத், ஆந்திராவில் உள்ள விஜயவாடா, மசூலிப்பட்டினம், நெல்லூர், குண்டூர், திருவணாமலை, வேலூர், பெங்களூர், காஞ்சிபுரம், ஆரணி செஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு கரும்புகள் லாரிகளில் அனுப்பப்படுகிறது.